Take a fresh look at your lifestyle.

நல்ல வரவேற்பைப் பெற்ற கேப்டன் மில்லர்!

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக கலக்கி வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிகர் விஜய்யின் கோட்டையாக சொல்லப்படும் கேரளாவில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி கேரளாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் 63 லட்சமும், இரண்டாவது நாள் 84 லட்சமும் வசூலை குவித்துள்ளது.

3-வது நாளில் மட்டும் ஒரு கோடியே 9 லட்ச ரூபாய் வசூலை குவித்துள்ளது. மூன்றே நாட்களில் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் வசூலை குவித்ததன் மூலம் கேரளாவிலும் நடிகர் தனுஷின் படங்களுக்கான மார்க்கெட் எகிறியுள்ளது.

நல்ல விமர்சனங்களால் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்