வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜல்லிக்கட்டு போட்டியை மையமாகக் கொண்டு நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கடந்த சில மாதங்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.
சமீபத்தில் நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது முடிந்தவுடன் விரைவில் “வாடிவாசல்” படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
– தேஜேஷ்