கருத்து வேறுபாடு காரணமாக நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யிடமிருந்து பிரிந்து வாழ்ந்த அவருடைய மனைவி சங்கீதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார் சங்கீதா.
சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறுவதால் ஆஜராக முடியாத சூழலில் இருந்தார் முதலமைச்சர் விஜய்.
இந்த நிலையில், தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றார் சங்கீதா.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜாதா, முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.