பார்க்கும் போதெல்லாம் சோகம் என்னைச் சூழ்கிறது!

இளையராஜா உருக்கம்

“ஒருமுறை, சிற்ப அழகு நிறைந்த பேலூர்-ஹளேபீடு (கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்) சென்றிருந்தேன். கையோடு கேமராவும் எடுத்துப் போயிருந்தேன்.

மதியம் ஒரு மணி இருக்கும். நல்ல வெயில். அங்கே, பார்ப்பவர்களை நெஞ்சைப் பிசைந்து அழவைக்கிற மாதிரி ஒரு சிறுமி நின்றிருந்தாள்.

வறுமை உறைந்த முகம். அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. சும்மா கொடுத்தால் நன்றாக இருக்காது என்று அவளை அழைத்து, ஒரு தூணின் அருகில் உட்கார வைத்து போட்டோ எடுத்தேன்.

ஃபிலிம் ரோல் எடுத்து மாற்றினேன். நிமிர்ந்து பார்த்தால் அந்தச் சிறுமியைக் காணவில்லை.

எப்படியாவது அவளுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்று அவளைத் தேடுதேடு என்று தேடினார்கள் என்னுடன் வந்த கன்னடக் கவிஞர்கள். அவளைப் பார்க்கவே முடியவில்லை.

இதோ, இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சோகம் என்னைச் சுற்றிக்கொள்கிறது. நான் என்ன செய்வேன்?

நன்றி: விகடன் பொக்கிஷம்

Comments (0)
Add Comment