‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ், தற்போது ஓ.டி.டி. வெளியீட்டுக்காக லேபில் என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருமே கல்லூரியில் படிக்கும் போதே சினிமா கனவில் பயணித்து, பின்னர் அதனை நனவாக்கியவர்கள்.
சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படம் மூலம்தான், அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமானார்.
நண்பனை இயக்குநராக்க வேண்டும் என்றே கனா படத்தை தயாரித்தார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.
இந்த தொடருக்கு ‘லேபில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப்பும் நடிக்கிறார்.
மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த தொடர் வரும் 10-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Hotstar) வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
– தேஜேஷ்