பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம், வரலாற்றில் முதல் முறையாக 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடும் முதல் திரைப்படமாகவும் மற்றும் இரண்டாவது உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற வரலாறு சாதனையும் படைத்துள்ளார் இயக்குநர் பாயல் கபாடியா.
அப்போது கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றதற்காக பிரதமர் மோடி, கேரளா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பாயல் கபாடியா மற்றும் படத்தில் பங்குகொண்ட நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் அஜீஸ் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இப்படம் இன்று கேரளாவிலுள்ள திரையரங்குகளில் மட்டும் வெளியாகி உள்ளது. படத்தின் விநியோக உரிமையை ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா வாங்கியுள்ளது.
இந்நிலையில் கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ராணா ஆஸ்கர் விருதுக்காக எங்களால் முடிந்த வரை முயற்சி செய்வோம் என உறுதியுடன் கூறியுள்ளார்.