சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ், தில்ராஜா என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ‘தில்ராஜா’ என்று பெயரிட்டுள்ளனர்.
இதில், விஜய் சத்யா நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார்.
இவர்களுடன் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நெல்லை ஜெயந்தன், கலைகுமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவுற்று வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
திரில்லர், ஆக்க்ஷன் கலந்த வித்தியாசமான படமாக உருவாக்கி இருக்கும் தில்ராஜா படத்தில், நாயகன் விஜய் சத்யா தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கியக் கதாபாதிரத்தில் நடித்துள்ளதாம்.
அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாகி இருக்கிறதாம் தில்ராஜா படம்.
இதனிடையே, இந்தப் படத்தில் ஆண்டனிதாசன் குரலில், கலைக்குமார் பாடல் வரிகளில் உருவாகியுள்ள “சாமி குத்து” பாடலை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.