ரசிகர்களைக் கவர்ந்த ‘விடுதலை-2’ ஃபர்ஸ்ட் லுக்!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது. நடிகர் சூரியின் நடிப்பும் பாராட்டு பெற்றது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வெற்றிமாறன் வைத்திருந்தார்.

இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Comments (0)
Add Comment