மிருகத்தைத் தான் ரொம்ப விரும்புறேன்!

சாண்டோ சின்னப்பா தேவர்

“என் படம் எல்லாவற்றிலும் அனிமல்ஸ் வரும். நானே ஒரு சிங்கம் வளர்க்கிறேன். குதிரை, யானை, குரங்கு எல்லாம் வைத்திருக்கிறேன்.

மனிதனை விட, நான் மிருகத்தைத் தான் ரொம்ப விரும்புகிறேன்.

ஒரு மனிதனுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், போகிற வழிகளில் எல்லாம் உங்களுக்குக் கெடுதல் பண்ணிக் கொண்டிருப்பான்.

மிருகம் அப்படி இல்லை..பாருங்க..

அதற்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், உடனே அந்த இடத்தில் உங்களைக் கொன்றுவிடும். மனிதனைப் போல போகிற இடம் எல்லாம் சித்திரவதை செய்கிற தன்மை அதற்கு இல்லை.

நான் மிருகம் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன்”

– சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான சாண்டோ சின்னப்பா தேவர் சந்திப்பு ஒன்றில்- ‘பால்யூ’ தொகுத்து எழுதிய ‘பிரபலமானவர்கள் சந்திப்பு’ என்று நூலில் இருந்து..

Comments (0)
Add Comment