ரொமான்டிக் கதையில் பொருளாதாரம்!

'லவ் ஓ லவ்' இயக்குநர் லக்ஷ்மண் விளக்கம்

இயக்குநர் லக்ஷ்மண், சந்தோஷ்.பி ஜெயக்குமார் ஆகியோரிடம் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.

ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் இயக்குநரிடம் பேசியவை:

“இன்னைக்கு நாம் பார்க்கிற இந்த பொருளாதார உலகத்துல நாம என்னாவாகிட்டிருக்கோம் அப்படிங்கறதை சொல்லியிருக்கேன்.

பெற்றோர்கள் மகனை கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் படிக்க வைக்கிறாங்க. அவன் படிப்புக்காக வீட்டை விற்கிறாங்க; இல்லைனா சேர்த்து வச்ச பணத்தை மொத்தமா செலவழிக்கிறாங்க.

படிச்சு முடிச்சதும், ஒரு தொழில் தொடங்கலாம்னு வங்கிகள்ல லோன் கேட்டா தர மாட்டாங்க.

அதனால அவன் ஏதோ ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போயி மாசம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கியாச்சுன்னா, எல்லா வங்கியும் லோன் கொடுக்க ஓடிவரும்.

அவன் கேட்ட லோன் கிடைக்காது, ஆனா, செலவு பண்றதுக்கும் காஸ்ட்லியா வாழறதுக்கும் வங்கிகள் லோன் கொடுக்கும்.

இப்படியான உலகத்துக்குள்ளதான் நாம வாழ வேண்டியிருக்கு. அதையும் இந்தப் படம் பேசும்”.

Comments (0)
Add Comment