சினிமாவில் உண்மையைப் பேச முடிவதில்லை!

நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆதங்கம்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் சோனாக்ஷி சின்ஹா.

தமிழில் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ள இவர், திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார். அண்மையில் ஜோதிகாவுடன் இணைந்து ‘சிஸ்டம்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் ஓ.டி.டி.யிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சோனாக்ஷி சின்ஹா, “சினிமாவில் உண்மையைப் பேச முயன்றால், அந்தப் படத்துக்கு பல தடைகள் வருகின்றன.

எனவேதான் திரையுலகினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். மனதில் பட்டதை பேசவும் பயப்படுகிறார்கள்.

முன்பு இருந்த சினிமா வேறு, இப்போதைய சினிமா வேறு. அப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இருந்தது. இப்போது அது இல்லை.

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த காலத்தில் உண்மையை பேசவே பயமாக இருக்கிறது. எனக்கும் நிறைய சங்கடங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment