நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா:
இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள படம் ‘நந்தன்’.
வரும் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி; ஒரு நல்ல கதையை எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும், நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம், ஆனால் அது முடிவு செய்வதுதான்.
அப்படித்தான் சசிகுமார் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்தக் கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள்.
சசி என் நண்பன், அவனைப் பொத்தி பொத்தி பார்த்துக் கொள்வேன். ஆனால் இந்தப் படத்தில் அத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறான்.
நடிக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் சண்டைக் காட்சிகள் வைத்தால், பார்த்து நடந்து கொள்வார்கள்.
ஆனால், மக்கள் மத்தியில் விட்டுவிட்டால் அவர்கள் அடித்தே கொன்று விடுவார்கள். அது போல் தான் இந்தப் படத்திலும் நடந்தது.
ஆனால், அவன் பட்ட கஷ்டத்திற்கெல்லாம், இந்தப் படம் அவனுக்கு பெருமை தேடித் தரும். நந்தனுக்கு முன் – நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான்.