கே.பி அவர்களின் படைப்புகளில் பாடலாசிரியராக பணியாற்ற எவ்வளவு அறிவு, இசை ஞானம், புத்திசாலித்தனம் தேவை.
இவ்வளவு திறமைகள் மட்டுமே போதாது அவர் குறிப்பிடும் நேரத்தில் வந்தாக வேண்டும். தனது திறமையால் இயக்குநரை திருப்தி செய்தாக வேண்டும்.
சின்னத்திரையில் ரயில் சிநேகம் தொடரில் கவிப்பேரரசு அவர்கள் இயக்குநர் சிகரத்தோடு பணியாற்றிய இடத்தில் கிருதையா அவர்கள் கவிப்பேரரசு அவர்களின் ஒப்புதலோடும், ஆதரவோடு தனதாக்கி அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்ட திறமையாளர்.
வைரமுத்துவே பலமுறை கிருதையா அவர்களுக்கு பல பக்தி பாடல்களை சிபாரிசு செய்து இருக்கிறார். எப்பேர்ப்பட்ட திறமையான கவிஞர் டாக்டர் கிருதையா.
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரோடு பணியாற்றிய தொடர்கள் ஒன்றா இரண்டா?
1994 ல் இணைந்து பணியாற்றத் துவங்கி பாலசந்தரின் சின்னத்திரை,
கையளவு மனசு
ஜன்னல்,
சாலிகிராமத்தில் சாவித்திரி,
பத்தினி கேட்ட கூலி,
காதல் பகடை
காதல் வாங்கி வந்தேன்,
ப்ரேமி,
காசளவு நேசம்,
சில நிஜங்கள்
சில நியாயங்கள்,
மரபு கவிதைகள்,
அண்ணி,
அம்மாவுக்கு ரெண்டுல ராகு,
சஹானா
எங்கிருந்தோ வந்தாள்,
தேன் மொழியாள்,
நான் அவளில்லை,
காமெடி காலனி,
வீட்டுக்கு வீடு லூட்டி,
சாந்தி நிலையம்,
அமுதா ஒரு ஆச்சர்யகுறி என்று 2013 வரை கவிதாலயாவின் கிளையான மின்பிங்களின் அத்தனை தொடர்களிலும் தனது இயக்கத்தில் பொய், ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படங்களில் இயக்குநர் பாலசந்தரின் சவாலை ஏற்று திறம்பட பணிபுரிந்து அவரின் பாராட்டைப் பெற்ற கவிஞர்.
அத்தனை தொடர்களிலும் இயக்குநரோடு கிருதையாவை இணைக்கும் பாலமாக தயாரிப்பு நிர்வாகியாகியாக உடன் இருந்திருக்கிறேன்.
அன்பு, அமைதி, எளிமையோடு புன்னகையையும் தாங்கி வலம் வந்தவர். என் மேல் அளவற்ற அன்பை பொழிந்தவர்.
இவர் இழப்பு எனக்கு மிகுந்த சோகத்தை உண்டாக்கி விட்டது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும்.
எங்கள் கிருதையாவின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி பெறும்.
கண்ணீரோடு என் அஞ்சலி.
டாக்டர் கவிஞர் கிருதையாவின் பாடல்கள் அழியா புகழுடன் என்றும் நிலைத்திருக்கும்.
– மோகன் (கே பாலசந்தர்)