தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், கன்னட சினிமாத்துறையின் மூத்த நடிகருமான கிச்சா சுதீப், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நான் ஈ, பாகுபலி, புலி போன்ற திரைப்படங்களால் பரிட்சையமானவர்.
2016-ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் Kotigobba 2 (தமிழில் ‘முடிஞ்சா இவன புடி’ என வெளியானது) என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
அதன்பின் அவருடைய நடிப்பில் வெளிய ‘மேக்ஸ்’ என்ற திரைப்படமானது திரையரங்கில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற அத்திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலை ஈட்டியது.
கிச்சா சுதீப் மற்றும் இயக்குநர் பிரேம் ஆகியோர் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகின்றனர். இருவரும் இதற்கு முன்பு 2018-ல் வெளியான The Villain திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.
இம்முறை, The Villain படத்தைப் போல இரண்டு முன்னணி கதாநாயகர்களை மையமாகக் கொண்ட கதையாக இல்லாமல், குடும்ப உறவுகள் மற்றும் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையை பிரேம் உருவாக்குகிறார்.
இந்தப் படம் சுதீப்பின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது இயக்குநர் பிரேமின் 10-வது இயக்கப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், சுதீப்பைத் தவிர மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
படத்தின் First Look-ல் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், “This time, seriously, it’s a family matter” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் தற்போதைய தலைமுறையைச் சுற்றி கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Villain திரைப்படம் 2018-ல் வெளியானது. இதில் சுதீப்புடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படம் இரண்டு முன்னணி நட்சத்திரங்களை ஒரே கதையில் இணைத்திருந்தது. புதிய படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாகிறது.
சுதீப் தற்போது Billa Ranga Baasha திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அனுப் பண்டாரி இயக்கும் இப்படம் Action–Adventure–Fantasy பின்னணியில் உருவாகிறது.
மேலும், People Media Factory நிறுவனத்துடன் இணைந்து வரலாற்றுப் பின்னணியிலான Devaraya திரைப்படத்திலும் சுதீப் நடிக்கிறார். இதுதவிர சில திரைப்படங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
பிரேம்–சுதீப் கூட்டணியின் புதிய படம் அக்டோபர் 20-ஆம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிச்சா சுதீப் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
“நான் 12வது படிக்கும் போதே சினிமாவில் நடிக்கணும் என்ற ஆசை வந்திடுச்சு. படம் பார்க்க ரொம்ப பிடிக்கும். சினிமா இல்லாட்டி கிரிக்கெட் பிளேயரா வரணும் ஆசை. ஆனால், எங்க அப்பா ரொம்ப கண்டிப்பா இருந்தாரு. இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்துவிட்டார்.
அப்பாகிட்ட சினிமாவில் நடிக்கணும் சொன்னேன். நான் நடிச்ச முதல் 3 படங்கல்ளும் பிளாப். நடிப்பு சரியா வரலைன்னு சீரியல் பக்கம் போனேன். அங்கே போனா துணை நடிகர் கதாப்பாத்திரம்.
சரி நடிப்பு நமக்கு வரலை இதையாவது நல்லா பண்ணனும் நடிக்கத் தெடங்கிட்டேன். அந்த டைம்ல தான் தமிழில் ஒரு படம் பயங்கரமா தியேட்டரில் ஓடிட்டு இருக்கு. ஆனால், அந்த படம் பயங்கர சிக்கலில் தியேட்டரில் 2 முறை வெளியாகி அதுக்கப்புறம் பிக் அப் ஆகுது.
நான் அந்த படத்தை பார்த்ததும், இந்த படத்தை கன்னட ரீமேக்ல நான் நடிக்க கூடாதுன்னு நினைத்தேன். அந்த படம் தான் விக்ரம் சார் நடிச்ச சேது.
தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதே மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது. இப்பவரைக்கும் கிச்சா என்ற பெயர் எனக்கு மறக்க முடியாத வாழ்க்கை.
கிச்சா படத்தில் நடிக்கும் போது எனக்கு கால் முறிவு ஏற்பட்டது. அந்த வலியோடதான் கிச்சா படத்தில் நடித்தேன். அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு போறேன். யாருமே இல்லை. தியேட்டர் மேனேஜர் என்னை பார்த்து வாழ்த்துகள் சார்னு சொன்னாரு. அப்ப நம்பலை.
ஒரு ரசிகர் நான் நடந்து வருவதை பார்த்ததும் என் பெயரை மறந்து, “நீங்க தான கிச்சா” என சொல்லி கொண்டாடுனாங்க. அப்போ உச்சத்துக்கு போனது தான். இப்ப வரைக்கும் நடிகராக என் பயணம் தொடருது”.