மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்!

அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், R சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment