கதை சொல்லியாக கவனம் ஈர்த்த மிஷ்கின்!

தொழில்நுட்பங்களைத் தாண்டி, கதை சொல்லியாக கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மிஷ்கின்.

`சித்திரம் பேசுதடி’, `நந்தலாலா’, `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, `பிசாசு’ என பல படங்களை இயக்கியுள்ளார்.

இவருடைய ஒவ்வொரு படங்களிலும் மன்னிப்பு, இரண்டாம் வாய்ப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை விதைத்தவர்.

அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ள மிஷ்கின், நந்தலாலா என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார்.

மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்பட்டவர்.

ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.

இந்த பட்டியலில் கண்ணாடி நாயகன் மிஷ்கின் இயக்கிய சிறந்த 5 தமிழ்ப் படங்களைக் காண்போம்.

துப்பறிவாளன்

துப்பறிவாளன் 2017-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் திரில்லர் திரைப்படம். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினை ராய் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம்.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் நடிகருமான விஷால் தயாரிக்க, இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார்.

பிசாசு 

பிசாசு தமிழில் வரவிருக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்க பாலா தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நாகா, பிரயாக மார்டின் மற்றும் ஹரிஸ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அஞ்சாதே

அஞ்சாதே 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ளார்.

நரேன், பிரசன்னா, அஜ்மல் அமீர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சுந்தர் சி பாபு.

யுத்தம் செய்

யுத்தம் செய் 2011-ம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்க, சேரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் கே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முகமூடி

முகமூடி 2012ல் வெளிவந்த இந்திய தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இதனை எழுதி, இயக்கியவர் மிஷ்கின்.

இதில் ஜீவா (திரைப்பட நடிகர்), பூஜா ஹெக்டே மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் முதல் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.

வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால், அவரது ரசிகர்கள் அவரை கொண்டிடாடி மகிழ்கின்றனர்.

நன்றி: film beat

Comments (0)
Add Comment