ரூ. 50 கோடி வசூல்: கம்பேக் கொடுத்த சமந்தா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம் சமந்தாவின் வெற்றிகரமான மீள்வருகை படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

முதல் நாள் வசூல் விவரம்

இந்த நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.13.15 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment