தமிழ்த் திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் 2017-ல் பா. பாண்டி என்ற படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் ராயன் என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வார இதழ் ஒன்றிற்காக தனுஷ் அளித்த நேர்காணலில், “சரியான சமயத்தில் சரியான வாய்ப்புகள் வந்ததால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என் வளர்ச்சிக்கு காரணம் என் இயக்குநர்கள் தான். எனது தவறுகளைக் கூட அவர்கள் விரும்பினார்கள். மன்னித்தார்கள். என்னை உருவாக்கினார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால் தான் எனக்கு இந்த வளர்ச்சி சாத்தியமானது. இயக்குநர் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். அது ஒரு பொறுப்பும் கூட.
ராயன் படத்தை இயக்கியதில் கொஞ்சம் பயமாக இருக்கிறது. தெலுங்கில் எனக்கு பிடித்த நடிகர் பவன் கல்யாண். எனக்கு ஜூனியர் என்.டிஆருடன் இணைந்து நடிக்க ஆர்வம் உள்ளது” என்றார்.