31 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த பிரபு – சுகன்யா!

அறிமுக இயக்குநர் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மேரிகோல்ட்’.

இதில், ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் அமைகிறது.

இத்திரைப்படத்தில் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார்.

கிரியேட்டிவ் புரொடியூசர்: சஞ்ஜெய் விஜய் ராகவண், கலை: ஜி. துரைராஜ், நடனம்: தீபு எம், ஸ்டண்ட்: அபிஷேக் ஸ்ரீனிவாசன்.

‘மேரிகோல்ட் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment