வரவேற்பைக் குவித்த ‘அன்​னக்​கிளி​யே’ இசை ஆல்​பம்!

இசை அமைப்​பாளர் அனிருத்​தின் இசை நிறு​வன​மான அல்​பு​கெர்க்கி ரெக்​கார்ட்ஸ் ‘அன்​னக்​கிளி​யே’ என்ற வீடியோ இசை ஆல்​பத்தை வெளி​யிட்​டுள்​ளது.

ஸ்மித் ஆஷர் இசை​யில் உரு​வான இந்த சுயாதீன ஆல்​பத்​தின் பாடலை, தீக்ஷிதா எழுதி பாடி​யிருக்​கிறார்.

அவருடன் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடி​யுள்​ளார். இதில் பவன் அலெக்​ஸ், பிரகதி ஸ்ரீவத்​சவா நடித்​துள்​ளனர்.

இந்தப் பாடலுக்​கான வீடியோவை விக்கி பப் இயக்​கி​யுள்​ளார். ஜே சரோலா ஒளிப்​ப​திவு செய்துள்ளதை தீஜோ பரத்​வாஜ் தயாரித்​துள்​ளார்.

இப்​பாடலுக்​காக, பறவை மற்​றும் விலங்கு இனத்​தைச் சார்ந்த யாழியை, கிராபிக்ஸ் மூலம் 6 மாத கால உழைப்​பில் உரு​வாக்​கி​யுள்​ளனர்.

இதை இன்​றைய ஜென்ஸீ தலை​முறை​யினருக்கு அறி​முகப்​படுத்​தும் வகை​யில் இதில் பயன்படுத்​தி​யுள்​ளனர்.

இந்த வீடியோ ஆல்​பத்தை அனிருத் அவருடைய பிரத்​யேக யூடியூப் பக்​கத்​தில் வெளியிட்டுள்ளார். அது வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

Comments (0)
Add Comment