பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தர முடியாது!

-நடிகை பிரியாமணி

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியாமணி. இவர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றிப் பேசிய நடிகை பிரியாமணி, “மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்  இருக்கின்றன.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு  ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும்.

எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்க் கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை” என்றார் பிரியாமணி.

Comments (0)
Add Comment