கத்ரீனா கைப் டைகர்-3 படத்தில் இடம்பெற்ற “லேகே பிரபு கா நாம்” பாடலில் 7 அதிரடியான தோற்றங்களில் தோன்றுவதுடன் தனது ஒட்டுமொத்த திரையுலகப் பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கத்ரீனா பேசும்போது, “லேகே பிரபு கா நாம்” பாடல் கண்ணை கவரும் பாடலாக உருவாகி இருக்கிறது. துருக்கியின் கப்படோசியாவின் சுவாசத்தை திணற வைக்கும் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு காட்சிரீதியாக மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருக்கும்.
மாஷால்லா மற்றும் ஸ்வாக் சே ஸ்வாகத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த வைபவி மெர்ச்சன்ட்டுடன் மீண்டும் ஒருமுறை மீண்டும் இணைந்திருக்கிறேன்.
எனக்கான பிரமிக்க வைக்கும் தோற்றங்களை உருவாக்குவதில் உண்மையிலேயே சிறந்து விளங்கும் அனைதா ஷராஃப் அடஜானியா எனது அலங்காரத்தை மேற்கொண்டுள்ளார்” என்றார்.
பாடலின் டீசர் உடனடியாக வைரலானது. பிரீத்தம் இசையமைப்பில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி பாடியுள்ள இந்தப் பாடலில் சல்மான் கானும் கத்ரீனாவும் நம்பமுடியாத கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த பாடலில் இவர்கள் இருவருக்குமான அழகிய தோற்றத்தை பார்க்கும்போது இது இந்த பண்டிகை சீசனில் ஒரு பார்ட்டி ஆந்ததமாக நிச்சயமாக மாறும்.
எப்போதும் சல்மான் கானுடன் நடனம் ஆடுவதை விரும்புகிறார் கத்ரீனா. இதுபற்றி அவர் கூறுகையில், “சல்மான் கானுடன் நடனம் ஆடுவது அற்புதமானது.
மேலும் இந்த “லேகே பிரபு கா நாம்” பாடலின் மூலம் பல ஆச்சரியப்படத்தக்க நினைவுகளை என்னுடன் எடுத்து செல்கிறேன்.
ஸ்வாக் சே ஸ்வாகத் பாடல் அளவுக்கதிகமான அன்பை பெற்றது போல இந்த “லேகே பிரபு கா நாம்” பாடலும் இன்னும் உயரம் தொடும் என நம்புகிறோம்” என்கிறார்.
சல்மான் கான் & கத்ரீனா கைப் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன் ஸ்கிரீன் ஜோடி. அவர்கள் வரலாற்று வெற்றிகளையும் தலைமுறை தாண்டிய பாடல்களையும் வழங்கியுள்ளனர்.