அப்பா – மகள் கதையில் விஜய் ஆண்டனி!

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ படங்களை இயக்கிய மு.மாறன், அடுத்து இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.

ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ‘அப்பா குட்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில், ப்ரீத்தி அஸ்ராணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, முத்துக்குமார், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“தந்தை – மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, ஆக்ஷன் அம்சங்களுடன் இணைந்துள்ளது. உணர்ச்சி ஆழமும் அதிரடியும் நிறைந்த கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி தோன்றுகிறார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என படக்குழு கூறியுள்ளது.

Comments (0)
Add Comment