யாருக்கும் தெரியாத யுவனின் மறுபக்கம்!

நெகிழ்ந்த நடிகர் பிரேம்ஜி

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.‌

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய ‘ஜல்சா பண்ணுங்கடா..’ ஸ்டைலில் உற்சாகமாக கலாய்த்து தள்ளினர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் பன்மடங்காக பெருகியது.‌

இந்நிகழ்ச்சியில் பிரேம்ஜியிடம் காணப்பட்ட மாற்றம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு முடிந்ததும் உடன் நடிக்கும் சக நடிகர்களை அவர்களுடைய வீட்டிற்குச் செல்ல விடாமல்.. பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு… தற்போது குடும்பமே முக்கியமானது என்றும், நாம் அனைவரும் பணி முடிந்த பிறகு வீட்டிற்கு தான் திரும்ப வேண்டும் என்று அவர் நிகழ்ச்சியில் பேசிய போது.. அங்கு இருந்தவர்களும், ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

சுருக்கமாக சொல்லப்போனால்.. ‘மச்சி ஓபன் தி’ பாட்டில் என்று பேசிய வாய்… தற்போது ‘மாமி ஓப்பன் தி ஊறுகாய் ஜார்’ என்ற அளவிற்கு பேசத் தொடங்கி இருக்கிறார்.

இதன் மூலம் பிரேம்ஜியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

சிவாவும், பிரேம்ஜியும் நெருங்கிய நட்பாக திகழ்வதன் பின்னணி குறித்து கேட்டபோது.. நாங்கள் இருவரும் நெருங்கிய நட்புடன் பழகுவதற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்.

அதுமட்டுமல்ல.. அவருடைய ஸ்டுடியோவில் நாங்கள் இருக்கும்போது அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாது அனைவரையும் சந்தோஷப்படுத்துபவர் யுவன்தான்.

மற்றவர்கள் அறிந்திடாத யுவனின் மற்றொரு பக்கத்தை நாங்கள் இருவரும் நேரில் பார்த்து உள்ளோம்” என இருவரும் ஒரே வாய்ஸில் பதிலளித்தனர்.

அத்துடன் யுவன் ஷங்கர் ராஜா எனும் இசை மேதையை பற்றி இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட விசயங்கள் அனைத்தும்… யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்த்து ரசித்து கேட்டு கொண்டாட வேண்டிய விசயங்கள் என்றால்.. அது மிகையில்லை.

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக பிரேம்ஜி கரகாட்டம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதிலிருந்து பிரேம்ஜி இசையில் மட்டுமல்ல தான் ஒரு நடன சூறாவளி என்பதை நிரூபித்த தருணங்கள்… ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கியது.

பிரேம்ஜி கரகாட்டம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதைப் போல்.. சிவாவும் தனது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதுடன் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’, என்ற பட்டத்தையும் பெற்று தந்த ‘தமிழ்ப் படம்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது என்றும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.‌

அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஸ்கிரீன் ஸ்பேசை பகிர்ந்து கொண்டதைப் பற்றியும் பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் நடனம் ஆடிய அனுபவத்தைப் பற்றியும், படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களை சிவா சிலாகித்தபடியே பகிர்ந்து கொண்டார்.

Comments (0)
Add Comment