இரண்டு மொழிகளில் வெளியாகும் ஜப்பான்!

நடிகர் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் தயாரிப்பாளர் எஸ்‌.ஆர். பிரபு சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ஜப்பான் படம் வெளியாக உள்ளது. நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு அவருடன் பணியாற்றிய அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

விழாவுக்கான அனுமதி முழுமையாக வாங்கப்பட்டது. கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானது எதனால் என்று எனக்கு தெரியவில்லை. அது அந்த படக்குழுவுக்கு தான் தெரியும்.

கார்த்தியின் ரசிகர்கள் 7,000 பேர் வரை விழாவுக்கு வர உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள கார்த்தி ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜப்பான் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது.

ஜப்பான் முழுக்க சமூக படம் கிடையாது. நகைச்சுவையான படம். அரசியல் படம் கிடையாது. உலகம் முழுவதும் 1,500 முதல் 2,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

குடும்பத்துடன் வந்து பார்க்கும் விதமாக ஜப்பான் படம் இருக்கும். ராஜுமுருகன் படம் என்பதால் சமூக கருத்து இருக்கும். முகம் சுளிக்கும் வன்முறை காட்சிகள் படத்தில் இல்லை. தீபாவளி படம் என்பதால் கொண்டாட்டமாகவே உருவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment