2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆறுமுககுமாருடன் விஜய் சேதுபதி தனது 51வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், இந்தப் படத்திற்கு ‘ஏஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஏஸ்’ படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை டீசரில் பிரதிபலிக்கிறது.
ஒளிப்பதிவை கரண் பி.ராவத் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர்.கோவிந்தராஜும், கலை இயக்கத்தை ஏ.கே. முத்துவும் மேற்கொண்டுள்ளனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 7C எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ‘ஏஸ்’ படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திரைக்கு வர உள்ளது.
– தேஜேஷ்