மக்களைக் குடிகாரர்களாக மாற்றியது போதும்!

திரைக்கலைஞர் சிவகுமார் ஆதங்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  திரைக்கலைஞர் சிவகுமார் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சிவகுமாரின் ஆதங்கமும் வேண்டுகோளும்:

“என்னுடைய வேண்டுகோள் ஒன்று தான். யார் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்.

குடிமக்களை குடிகார மக்களாக மாற்றியது போதும். தான் குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல், கடைக்கோடி மனிதன் வாழ்வை முன்னேற்ற வேண்டும்.

மதுவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிமக்களை குடிகார மக்களாக்குகிறார்கள். கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் குடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எந்தக் கட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தவில்லை.

டாஸ்மாக் மூடுவார்களா என எனக்குத் தெரியாது. செய்தால் நன்றாக இருக்கும்.” என்றார்.

இலவச திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “இலவசங்கள் கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்” என சிவகுமார் பதிலளித்தார்.

அடுத்த அமையப்போகும் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமா?

Comments (0)
Add Comment