தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் படப்பிடிப்பை முடித்தவுடன் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைய உள்ளது.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பணிகளும் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிய உள்ளது.
இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
‘கோட்’ ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. கோட் படத்தை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
– தேஜேஷ்