கோடையில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மகாராஜா!

விஜய் சேதுபதியின் 50வது படமான `மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி மே மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது படமான `மகாராஜா’ திரைப்படத்தை பேஷன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்தப் படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே `குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியவர்.

இந்த நிலையில் `மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் வரும் மே 16ஆம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment