இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் ‘விடுதலை 2’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இதுகுறித்த போஸ்டரும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான வெற்றிமாறன், திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி சிலப் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘மா.பொ.சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்பதன் சுருக்கம் தான் ‘மா.பொ.சி’ என்று போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை குணச்சித்திர நடிகரும், ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கியவருமான போஸ் வெங்கட் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தின் நாயகனாக விமல் மற்றும் நாயகியாக சாயாதேவி நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.
– தேஜேஷ்