நடிகராகும் வனிதா விஜயகுமாரின் மகன்!

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பார்த்திபனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

22 வயதான விஜய் ஸ்ரீஹரி, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜோவிகாவுக்கு முன்பே அவரது சகோதரர் விஜய் ஸ்ரீஹரி திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment