அறிமுக நாயகன் தருண் – அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் ‘குற்றம் புதிது’. ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் DR.S. கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ரஜித், கிரிஷ் பாடல்கள் எழுத, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
ஸ்டோரி போர்டு சந்திரன், நடன இயக்குனர் வரதா, ஆடை வடிவமைப்பாளர் கெசியா, வடிவமைப்பாளர் சம்பத், ஒப்பனை கலைஞர் “AIRPORT” ராஜா, பாடகர்கள் அனந்து, ரஜித், STILL PHOTOGRAPHYS. SAKTHIPRIYAN, பப்ளிசிட்டி டிசைனர் தினேஷ் குமார், இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன், தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் விசுவல் எஃப்எக்ஸ் பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது.
இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்தப் படம் கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.
இந்தப் படத்தின் பூஜை அண்மையில் சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.
இமாதம் 23-ம் தேதி தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.