தமிழ் திரையுலகம் தற்போது பெரிய பட்ஜெட் படங்களைத் தேர்தலுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யக் காத்திருக்கின்றன.
பா. ரஞ்சித் இயக்கிய சியான் விக்ரமின் ‘தங்கலான்’ அப்படிப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். படத்தை வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜூன் 28 ஆம் தேதி பான் – இந்திய மொழிகளில் ‘தங்கலன்’ படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
இது சியானின் பிறந்த நாளான வரும் 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் கோலார் தங்க வயலில் உள்ள பழங்குடியின மக்களின் கதையை விவரிக்கும். நடிகரின் கேரியரில் இது ஒரு மைல்கல் படமாக இருக்கும்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோடு, டேனியல் கால்டாகிரோன், ஹரிகிருஷ்ணன் அன்புதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர்.கே. எடிட் செய்கிறார்.
– தேஜேஷ்