ஓய்வெடுக்க அபுதாபி சென்ற ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார். என்ன காரணத்துக்காக சென்றுள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வந்த `வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ஓய்வு எடுக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் கிளம்பிய தகவல் வெளியாகியது. ஒரு வாரம் ரஜினிகாந்த் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுத்த பின் சென்னை திரும்ப உள்ளார்.

மேலும் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் அபுதாபியில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் `கூலி’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment