ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ராஷ்மிகா!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் படத்தை முடித்தவுடன் அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. படத்திற்கு `சிக்கந்தர்’ என்ற டைட்டில் அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில் ‘சிக்கந்தர்’ திரைப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு நடிகைகளை பரிசீலனை செய்துவந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே பாலிவுட்டில் வெளியான `அனிமல்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இதனை அடுத்து மீண்டும் ஒரு பெரிய பாலிவுட் வாய்ப்பை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment