மனிதனுக்குள் எழும் ரசாயன மாற்றத்தைக் கூறும் ரசவாதி!

சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது.

எடிட்டர் சாபு ஜோசப், “இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார்.

சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்‌ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் அருள்ஜோதி: ‘மெளன குரு’ தான் எனக்கு முதல் படம். ‘மகாமுனி’ படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை.

அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் ரிஷிகாந்த்: “எனக்கு பிடித்த இயக்குநர் சாந்தகுமார். அவருடைய படத்திலேயே நான் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினர் அனைவருடனும் வேலைப் பார்த்தது சந்தோஷம்!” என்றார்.

நடிகர் ஜி.எம்.சுந்தர்: “‘ரசவாதி’ என்ற டைட்டிலே பிரமாதமான விஷயம். தனக்குள் ஏற்படும் விஷயத்தால் ஆளே மாறிப்போகும் ஒருவனின் கதைதான் இது.

‘மகாமுனி’ படத்தில் எனக்கு முக்கியமானக் கதாபாத்திரம் கொடுத்தார். அதேபோலதான், இந்தப் படத்திலும். அர்ஜூன் தாஸ், தான்யா என உடன் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.

நடிகர் சுஜித்: “சில இயக்குநர்கள் தங்களுக்குப் பிடித்த சேஃப் ஜானரிலேயே படம் எடுக்க விரும்புவார்கள். ஆனால், சாந்தகுமார் சார் அதை உடைக்க விரும்பி ‘ரசவாதி’ படம் எடுத்திருக்கிறார். படம் உங்களுக்குப் பிடித்தபடி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்”.

நடிகர் அர்ஜூன் தாஸ்: தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி” என்றார்.

Comments (0)
Add Comment