சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ்.
மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது.
திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தலைவர் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கே.ராஜன், “கன்னி என்கிற அற்புதமான தலைப்பு இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கன்னி என்பது பரிசுத்தம் தூய்மை என்ற பொருள்படும். அப்படிப்பட்ட அற்புதமான தலைப்பு வைத்திருக்கிறார்,
அவர் வைத்திருக்கிற கதைக்கரு தமிழ்ப் பாரம்பரியம், தமிழ்க் கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு, சித்த வைத்தியம் அனைத்தையும் உள்ளடக்கியது. அப்படிப்பட்ட அற்புதமான கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
ஒரு காலத்தில் சித்த மருத்துவம் சிறந்து விளங்கியது. பிறகு யாரும் ஏறெடுத்து பார்க்காமல் அலோபதிக்குச் சென்றார்கள். சித்த மருத்துவத்தின் சிறப்பு கொரோனா காலத்தில்தான் தெரிந்தது. சித்த மருத்துவம் தான் பக்கவிளைவுகள் இல்லாதது. ஒரு மரத்தின் இலை, பூ, காய், கனி அனைத்தும் மருந்தாகும். அது சத்து தானே தவிர பக்க விளைவுகள் இல்லாதது.
சிறு முதலீட்டுப் படங்களை நான் பாக்யராஜ், பேரரசு அனைவரும் சென்று வாழ்த்துவோம். நான் சாதாரணமாக நினைத்து தான் இங்கே வந்தேன்.
இந்த மேடை அற்புதமான மேடையாக இருக்கிறது. அனைவரும் படத்திற்காக ஆத்மார்த்தமாகப் பேசினார்கள். அர்பணிப்போடு உழைத்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குத் துணை நின்று படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழ் பண்பாடு, சித்த மருத்துவம் பற்றிச் சொல்லியிருக்கும் இந்த ‘கன்னி’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனக் கூறினார்.
இவ்விழாவில் 96 படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், கன்னி படத்தின் தயாரிப்பாளர் எம். செல்வராஜ், இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி, படத்தில் நடித்த அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பாளர் சாம், கலை இயக்குநர் சக்திவேல் மோகன், கலரிஸ்ட் சி. சுருளி ராஜன், மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன், தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார் ஆகியோர் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
#எம்_செல்வராஜ் #M_Selvaraj #தயாரிப்பாளர்_கே_ராஜன் #Producer_K_Rajan #இயக்குநர்_மாயோன்_சிவா_தொரப்பாடி #Director_Mayon_Siva_Dhorappatti #கன்னி #Kanni #அஷ்வினி_சந்திரசேகர் #Ashwini_Chandrasekar #மணிமாறன் #Manimaran #தாரா #க்ரிஷ் #Thara_Krish #ராம்_பரதன் #Ram_Bharathan #இயக்குநர்_பேரரசு #Director_Perarasu #கூல்_சுரேஷ் #Cool_Suresh