நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் – மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் AR ரஹ்மானின் கலக்கலான பாடல்கள் இசையமைக்கப்பட்டு வருகின்றன. யோகி பாபு பங்கேற்கும் காட்சிகள் அடுத்தக் கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், AR ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து ஒரு ஸ்டைலிஷ் Promo-வை படத்தின் இயக்குனர் மனோஜ் NS சென்னையில் படமாக்கி உள்ளார். இது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் Promo விரைவில் வெளியாக உள்ளது.
25 ஆண்டுகளுக்கு பிறகு AR ரஹ்மானும், பிரபு தேவாவும் இணைந்துள்ள படத்தின் தலைப்பு என்ன என்பது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.
சிறப்பாக உருவாகி வரும் இந்தப் படம், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தரமான, நகைச்சுவைக் காட்சிகள் கொண்ட சிறந்தப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டில் பான்-இந்தியப் படமாக திரைக்கு வர உள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
Behindwoods வழங்கும் இந்தத் திரைப்படத்தை மனோஜ் NS. இயக்கி வருகிறார். மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். அனூப் வி.எஸ் ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்றுள்ளனர்.