என் பேரன்புக்குரிய நண்பர்கள்…!

ஜி.கெளதம் நெகிழ்ச்சி

என் பேரன்புக்குரிய இரண்டு நண்பர்கள் அவர்கள். பாஸ்கர் சக்தியை அவர் பாஸ்கராக இருந்தபோதே, ரமேஷ் வைத்யாவை அவர் ரமேஷாக இருந்தபோதே தன் வீட்டில் வைத்து எனக்கு அறிமுகம் செய்துவைத்தார் பொன்ஸி.

பொன்ஸியின் மனைவி ராமஜெயம் எங்களையும் (நான், பாஸ்கர், ரமேஷ், பொன், காசி) தன் பிள்ளைகளாகவே பாவித்து உணவு சமைத்திருக்கிறார் பல நாட்கள். அதெல்லாம் நினைக்க நினைக்க இனிக்கும் காலம்!

பாஸ்கரும் ரமேஷும் பார்த்ததும் பிடித்துப்போனார்கள். பழகியதும் என் அன்புக்குரியவர்களானார்கள்.

இன்றைக்கும் எத்தனை கூட்டத்தில் பாஸ்கர் என்னைப் பார்த்து விட்டாலும் எழுந்து வந்து வாஞ்சையுடன் கை அணைப்பது அவர் என்மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம்.

இந்த ரமேஷுக்கு ரமேஷ்வைத்யான்னு பேரு வச்சு, ஜூனியர் போஸ்ட்டுக்குள் இழுத்துப் போட்டது இந்தாளுதான் என சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருகில் இருப்பவர்களிடம் அறிமுகப்படுத்தி கலாய்ப்பது ரமேஷ் என்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு.

எழுத்துலகில் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

திரையுலகிலகிலும் வெற்றித்தடம் பதிக்கப் போகிறார்கள் என்பது எனக்கு(ம்) மகிழ்வான செய்தி!

இருவரும் ஏற்கெனவே திரையுலகை எட்டிப்பார்த்தவர்கள் என்றாலும் இப்போது முழுமையாக கட்டி அணைத்திருக்கிறார்கள்.

பாஸ்கர் சக்தி எழுதி இயக்கியிருக்கும் ‘வடக்கன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.

படத்தில் நடிகனாகவும் களம் இறங்குகிறார் ரமேஷ் வைத்யா. ‘வடக்கன்’ திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாத் திசைகளிலும் அழகான அதிர்வுகளையும் உணர்வுகளையும் ‘வடக்கன்’ திரைப்படம் உண்டாக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

‘வடக்கன்’ திரைப்பட உருவாக்கத்தில் பங்குகொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்யா இருவரையும் எண்ணி மகிழ்ந்து, இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். படம் பெருவெற்றி பெற நானும் பிரார்த்திக்கிறேன்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment