சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள ’கொட்டுக்காளி’!

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது.

இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை, சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம், ருமேனியாவில் நடைபெறவிருக்கும், டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.

இதற்கு முன்னதாக 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் போரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. அடுத்தடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட கொட்டுக்காளி படம் தேர்வாகி வருவதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment