இசை பெரிதா? மொழி பெரிதா?

கவிஞர் வைரமுத்து பேச்சு

‘படிக்காத பக்கங்கள்’ என்ற தலைப்பில் படம் தயாராகி இருக்கிறது. முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இந்தப் படத்தை இயக்கியுள்ளளார். இதன் பட விழாவில் கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து “ஒரு பாடலில் இசை பெரிதா, மொழி பெரிதா? என்பது ஒரு சிக்கலாக பேசப்பட்டு வருகிறது. இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்கு பாட்டு என்று பொருள்.

சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், இசை சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.

இதைப்புரிந்து கொண்டவன் ஞானி.  இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி.

பாட்டுக்கு பெயர் வைப்பது இசையா, மொழியா? பாட்டுக்கு பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசை,  அபிநயம் செய்தது இசை, அதை மறுக்க முடியாது.

இசையும், மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று வைரமுத்து பேசினார்.

இசையா, மொழியா? என விவாதம் எழுந்து வரும் நிலையில், முன்னணி இசையமைப்பாளர்கள் கருத்து தெரிவித்து சர்ச்சையாகி வரும் நிலையில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு திரையுரகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விழாவில் நடிகர் பிரஜன், இசையமைப்பாளர்கள் சிற்பி, சாய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

-நன்றி தினந்தந்தி

#படிக்காத_பக்கங்கள் #Padikkadha_Pakkangal  #முத்துக்குமார் #Muthukumar #செல்வம்_மாதப்பன் #Selvam_madhappan #இசை #Music #மொழி #Mozhi #கவிஞர்_வைரமுத்து #Kavinger_Vairamuthu #இசையமைப்பாளர்_சிற்பி #Music_Director_Sirpi #இசையமைப்பாளர்_சாய் #Music_Director_Sai #நடிகர்_பிரஜன் #Actor_Prajan

Comments (0)
Add Comment