சர்வதேச பட விழாவில் வெளியாகிறது ‘கண்ணப்பா’ டீசர்!

விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா படம் ‘கண்ணப்பா’. தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஒரு அற்புதமான சாம்ராஜ்யத்தில் அமைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இயக்குனர் முகேஷ் குமார் சிங் என்பவரால் இயக்கப்பட்டது. அதோடு, இந்தியத் திரைப்படத் துறையின் பல்வேறு திறமைகளைக் கொண்ட நடிகர்களால் நடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கண்ணப்பா’ படத்தின் டீஸர் வரும் 20-ம் தேதி புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளது.

அவா என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரியின் பேனரின் கீழ், இரட்டையர்களான மணி ஷர்மா மற்றும் ஸ்டீபன் தேவசி ஆகியோரால் இசையமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையைப் பதிக்க ஆறு மொழிகளில் தயாராகி கொண்டிருக்கிறது கண்ணப்பா திரைப்படம்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment