ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் 2 படங்கள்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய `இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படம் ஜூன் முதல் வாரம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே கமல்ஹாசன் நடித்த இன்னொரு திரைப்படமான `கல்கி 2898 ஏடி’ என்ற படமும் அதே மாதம் 20ஆம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூன் மாதம் கமல்ஹாசனின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ‘இந்தியன் 3’ மற்றும் ‘தக்லைஃப்’ படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என்றால் ஒரே ஆண்டில் கமல்ஹாசனின் 4 படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவது நிச்சயம்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment