‘கல்கி’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898ஏடி’ என்ற திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ரிலீஸாக இருக்கும். வைஜெயந்தி மூவிஸ் மே 9 ஆம் தேதி வெள்ளித்திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டது. ஆனால் காட்சி வேலைகள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே தயாரிப்பாளர்கள் ‘கல்கி 2898AD’-ன் புதிய வெளியீட்டுத் தேதியை முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட புதிய போஸ்டருடன் வெளியிட்டனர்.

நாக் அஸ்வின் இயக்கிய இந்த பிரம்மாண்டமான படம் ஜூன் 27 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

அறிவியல் புனைக்கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘கல்கி 2898AD’. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவு ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை நிதின் ஜிஹானி சவுத்ரி, எடிட்டிங் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்.

– தேஜேஷ்

#கல்கி_2898AD #Kalki_2898AD #பிரபாஸ் #Prabhas #நாக்_அஸ்வின் #Nag_Ashwin #தீபிகா_படுகோன் #Deepika_Padukone #அமிதாப்_பச்சன் #Amitabh_bachchan #கமல்ஹாசன் #KamalHaasan #திஷா_பதானி #Disha_Patani #பசுபதி #Pasupathy #சந்தோஷ்_நாராயணன் #Santhosh_Narayanan #ஜோர்ட்_ஜே_ஸ்டோஜில்கோவிச் #Djord_je_Stojilkovic #நிதின்_ஜிஹானி_சவுத்ரி #Nithin_Jihani_soudri #கோத்தகிரி_வெங்கடேஸ்வர_ராவ் #Kothagiri_Venkateshwara_rav

Comments (0)
Add Comment