ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வசூலை குவித்து வருகிறது என்பது அவர் நடித்த ‘முத்து’ படத்தில் இருந்து தெரிந்தது.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்களும் ஜப்பானில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
இதனிடையே ரஜினி, விஜய் படங்களை அடுத்து தற்போது மேலும் சில தமிழ் படங்கள் ஜப்பானில் வசூலை குவித்து வருகின்றன.
அதில் ஒன்றுதான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.’
இந்தப் படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது.
இந்த நிலையில் தற்போது ஜப்பான் உள்பட மேலும் சில நாடுகளில் இந்தப் படம் சக்கை போடுவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக ஜப்பானில் உள்ள திரைப்படங்களில் இந்தப் படம் ஓடும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கியக் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் நிமிஷா சஞ்சயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ்.
– தேஜேஷ்