பறக்கும் பணம், தங்கம், இரும்புச் சங்கிலி.. பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் ஜெயம் ரவியின் ‘ஜெனி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த போஸ்டரில் இரும்பு சங்கிலியால் ஜெயம் ரவி கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சங்கிலி தூள் தூளாக நொறுங்குவது போன்றும் அந்த சங்கிலியிலிருந்து பணம் தங்கம் உள்பட பல பொருட்கள் மிதந்து வரும் வகையில் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி நடிப்பில், மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `ஜெனி’.
படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசை புயல் ஏஆர் ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
– தேஜேஷ்