வெளியானது ராம் சரணின் ‘ஜரகண்டி’ பாடல்!

நம்ம ஊர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள நேரடி தெலுங்கு திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதற்கு முன்பாக கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் – 2’ படத்தை அவர் டைரக்டு செய்யத் தொடங்கி இருந்தார்.

‘பட்ஜெட்’ எகிறியதால், அந்தப் படத்தை தயாரித்த ‘லைகா’ நிறுவனம், இதனை தொடருவதா? கை விட்டு விடுவதா? என தயக்கம் காட்டியது.

இதனால், ‘இந்தியன்-2’ வை கிடப்பில் போட்டு விட்டு, ராம் சரணை ஹீரோவாக வைத்து, ஷங்கர் ஆரம்பித்த படம் தான் ‘கேம் சேஞ்சர்’.

வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜரகண்டி’ என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘ரண்டக்க ரண்டக்க’ பாடலைப்போல், துள்ளல் இசையில் அதிரும் இந்தப் பாடலை பிரமாண்ட அரங்ககுகள் அமைத்து படமாக்கியுள்ளார், ஷங்கர்.

நூற்றுக்கணக்கான குரூப் டான்சர்கள் பின்னணியில் நாயகனும், நாயகியும் ஆடுப்பாடும், இந்தப் பாடல் காட்சிக்கு மட்டும் 90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா நடனம் அமைத்துள்ள ‘ஜரகண்டி’ பாடல், ரசிகர்களை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும்.

டலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடலின், தமிழ் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment