கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள படம் ‘P.T.சார்’.
இந்தப் படத்தில் காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பாக்யராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
‘P.T.சார்’ – ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25-வது படமாகும். இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக் குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ:
ஹிப்ஹாப் ஆதிக்கு இது வித்தியாசமான படம், மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக செய்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும்.
நடிகை மதுவந்தி:
இந்தப் படத்தில் நடிக்க முக்கியக் காரணம் கார்த்திக் தான். இந்தக் குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாக பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் ஷேட் உள்ள பாத்திரம், அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்தது.
இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். ஆதிக்கு இசையமைப்பாளராக இது 25 வது படம், வாழ்த்துக்கள். இப்படம் அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர்.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்:
ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப் படம் ஆரம்பித்தது.
அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார். அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும்.
மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது.
ஆனால் கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். இந்தப் படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக இருக்கும்.
நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி:
4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.
இந்தப் படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு நன்றிகள்.
அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். ‘பி.டி.சார்’ மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.