வெற்றிமாறன் படத்தில் ராகவா லாரன்ஸ்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது `விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் `வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வெற்றிமாறன் அடுத்த படத்தில் தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்க உள்ள நிலையில் இது குறித்த புகைப்படமும் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகவா லாரன்ஸ், வெற்றி மாறன் திரைக்கதையில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். வெற்றிமாறன் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஏற்கனவே அறிவித்த 2 படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றிமாறனுக்கும், இந்தப் படத்தை தயாரிக்கும் கதிரேசனுக்கும் எனது நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment