நடிகையின் காதலை படமாக்கும் சுரேஷ் கிருஷ்ணா!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இந்தப் படத்தில் நடிகையின் காதல் தான் கதை கருவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘வீரா’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட படங்களையும், கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

இவர் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா நடிகர், நடிகைகளின் காதல் தான் கதைக்கரு. இந்தப் படத்திற்கு ‘ஹீரோ ஹீரோயின்’ என்று டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் தெலுங்கு, இந்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

திவ்யா கோஷ்லே என்பவர் இந்தப் படத்தில் சினிமா நடிகை கேரக்டரிலும், பரேஷ் ராவல் இயக்குனர் கேரக்டரில் நடிப்பதாகவும், மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment